டெக் மஹிந்திரா நிறுவனம் தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 61.6% சரிவை பதிவு செய்துள்ளது. இது கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் மிகவும் மோசமான இழப்பாகும்.
இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெத் மஹிந்திரா, 16 வருட வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, ரிசசன் அபாயத்தால் தனது முதலீடுகளை குறைத்ததன் விளைவாக, டெக் மஹிந்திரா மிகப்பெரிய இழப்பை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, நிகழாண்டில், அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்பார்த்ததை விட குறைவான வருவாயை பதிவு செய்துள்ளன. அந்த வரிசையில், டெக் மஹிந்திராவின் வருவாய் 2.02% சரிந்துள்ளது. அடுத்த நிதியாண்டில், நிறுவனம் இந்த இழப்பிலிருந்து சீரான பாதைக்கு திரும்பும் என நம்புவதாக, டெக் மஹிந்திராவின் உயர் அதிகாரி பியூஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.














