உத்திரபிரதேசத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயில் வரும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்டமாக ராமர் கோவில் 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இது ரூபாய் 2000 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இந்த அயோத்தி ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை ராமஜென்ம பூமி தீர்த்த ஷெத்திரா அமைப்பினர் பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளனர்.