ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

October 26, 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய மிச்சல் ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரை அடுத்து களம் இறங்கிய டேவிட் வார்னர் 104 ரன்கள் குவித்தார். இவரை அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித், அபிஷேஷன் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு […]

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய மிச்சல் ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரை அடுத்து களம் இறங்கிய டேவிட் வார்னர் 104 ரன்கள் குவித்தார். இவரை அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித், அபிஷேஷன் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றும் நோக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. இதில் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகியதை தொடர்ந்து 100 ரன்கள் கூட எடுக்க முடியாமல் திணறியது. பின்னர் 21 ஓவரில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது நெதர்லாந்து அணி. இதனால் ஆஸ்திரேலியா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu