கேரளா மாவட்டம் எர்ணாகுளம் களமசேரி பகுதியில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில் கடைசி நாளான நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் குழந்தைகள் உட்பட 1300க்கும் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது அரங்கில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனை எதிர்பார்க்காத கூட்டத்தினர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு பிழைப்பதற்காக வெளியே ஓடி வந்தனர். அடுத்த சில வினாடிகளில் அரங்கின் பக்கவாட்டு பகுதிகளிலும் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து பல இடங்களில் தீப்பிடித்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட குண்டு வெடிப்புகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 51 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குழந்தை உட்பட 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.