சென்னையில் வீடு கட்ட அனுமதி கட்டணம் உயர்வு

November 1, 2023

சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க கட்டிட அனுமதி கட்டணம் நூறு சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கட்டிட அனுமதிக்கான கட்டிடங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன்படி 100 சதுர அடிக்கு மேல் வீடு, கட்டிடங்கள் கட்டினால் கட்டண சதவீதம் 100% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 40 சதுர மீட்டருக்கு குறைவான இடத்தில் வீடு கட்டுபவர்களுக்கு 10 சதுர மீட்டருக்கு 90 ரூபாய் கட்டணம் மாற்றம் ஏதும் இல்லாமல் வசூலிக்கப்படும். […]

சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க கட்டிட அனுமதி கட்டணம் நூறு சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கட்டிட அனுமதிக்கான கட்டிடங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன்படி 100 சதுர அடிக்கு மேல் வீடு, கட்டிடங்கள் கட்டினால் கட்டண சதவீதம் 100% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 40 சதுர மீட்டருக்கு குறைவான இடத்தில் வீடு கட்டுபவர்களுக்கு 10 சதுர மீட்டருக்கு 90 ரூபாய் கட்டணம் மாற்றம் ஏதும் இல்லாமல் வசூலிக்கப்படும். 41 முதல் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டுபவர்களுக்கு 10 சதுர மீட்டருக்கு ரூபாய் 155 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 100 சதுர மீட்டருக்கு மேல் அதாவது 1076 சதுர அடிக்கு மேல் வீடு கட்டினால் கட்டிட அனுமதி கட்டணம் நூறு சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அதாவது 101 சதுர மீட்டர் 401 சதுர மீட்டர் அளவுக்கு வீடுகள் கட்டும்பொழுது 10 சதுர மீட்டருக்கு ரூபாய் 1050 ஆக இருந்த கட்டணம் 2,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வணிக கட்டிடங்களாக இருந்தால் 2,300 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் பழைய கட்டிடங்களை இடிப்பதற்க்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் முறை 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu