அதானி பவர் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் லாபத்தில் 9 மடங்கு உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், அதானி பவர் நிறுவனத்தின் லாபம் 6594 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில் 696 கோடி அளவில் இருந்தது. எனவே, கிட்டத்தட்ட 9 மடங்கு அல்லது 848% உயர்வு பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாயில் 61% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில், அதானி பவர் நிறுவனத்தின் மொத்த வருவாய் 12155 கோடியாக உள்ளது. மேலும், எரிசக்தி துறையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமாக அதானி பவர் முன்னேறி உள்ளது. நிறுவனத்தின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பதிவாகியுள்ளது.