பொது மக்களுக்கு மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
நாடு முழுவதும் கோதுமை மாவு தரத்திற்கு ஏற்ப கிலோ 36 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் பொதுமக்களுக்கு சோதனை முறையில் மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை தொடங்கியது. இது கிலோ 29.50 பைசா விலையில் மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டது. இதன்படி 18000 டன் கோதுமை மாவு இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மத்திய அரசு பாரத் ஆட்டோ கோதுமை விற்பனையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. இதற்காக விலை கிலோவுக்கு ரூபாய் 27.50 பைசாவாக நிர்ணயித்துள்ளது. இவை மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 800 நடமாடும் வேன்கள் மற்றும் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.