இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வின் கோபால், 3வது முறையாக அமெரிக்க செனட்டர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நியூ ஜெர்சி மாகாணத்தில், அண்மையில் இடைக்கால தேர்தல் நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி சார்பில் இந்திய அமெரிக்கரான வின் கோபால் போட்டியிட்டார். அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரை விட 60% வாக்கு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அவர் செனட் உறுப்பினராக அங்கம் வகித்தார். அதன்படி, தற்போது, தொடர்ந்து 3 வது முறையாக அமெரிக்காவின் செனட் உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூ ஜெர்சியில் பிறந்து வளர்ந்த அவர், கொரோனா பரவலின் போது, அந்த மாகாணத்தில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து பொருளாதாரத்தை உயர்த்தும் முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இதன் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார்.














