பராமரிப்பு பணி காரணமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் மற்றும் மறு மார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து இரவு தாம்பரம் நோக்கி புறப்படும் மின்சார ரயில் சேவை பராமரிப்பு பணி காரணமாக இரவு நேர ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இவை 8, 9, 10, 13, 14, 15,16,17, 19, 20,21,22,23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரத்திலிருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு கடற்கரை நோக்கி செல்லும் ரயில் 19ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது.














