ஜி20 தலைவர் பதவியை ஏற்கும் இந்தியா , கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ௯றியுள்ளாா்.
ஜி20 என்பது பொருளாதாரத்தில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுகளின் குழுவாகும். ஜி20 ஆனது அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற 19 நாடுகளை உள்ளடக்கியது . டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை இந்தியா ஜி20ன் தலைவர் பதவியை வகிக்க உள்ளது. அதன்படி இந்தியா டிசம்பர் 2022 முதல் நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்களை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 தலைவர்கள் உச்சிமாநாடு 2023 செப்டம்பர் 9-10ம் தேதியில் புதுடில்லியில் நடைபெற உள்ளது. ஜி20 ஆனது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதம், சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவிகிதம் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது. இது குறித்து ஐ. நா சபை கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
கடன், பொருளாதார வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா மற்ற ஜி20 உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும் என்று கூறினார். அத்துடன் நிதி நிறுவனங்களின் நிர்வாகம் சீர்திருத்தப்படும் என்று அவர் கூறினார். இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு ஆபத்து காலத்தில் உதவும் வகையில், ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. அதேபோல் இலங்கைக்கு எரிபொருள், அத்தியாவசிய பொருட்களுக்காக 3.8 பில்லியன் டாலர் கடன்களை வழங்கியது. அத்துடன் மியான்மருக்கும் 10,000 மெட்ரிக் டன் உணவு மற்றும் தடுப்பூசிகளையும் வழங்கியது. இந்நிலையில் இந்தியா உலகநாடுகளின் பொ௫ளாதார வளர்ச்சியை மேம்படுத்த முழுமனதுடன் செயல்படும் என்று ௯றியுள்ளாா்.














