பிணை கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பேச்சுவார்த்தை

November 15, 2023

பிணை கைதிகளை விடுவிக்க கோரி ஹமாஸ் தரப்பினருடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் தங்கள் தரப்பு கோரிக்கைகளை ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படை அல்கசாம் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, காசாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி ஒத்துக்கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பிணைய கைதிகளை நாங்கள் விடுவிக்கிறோம். ஆனால் அந்தப் போர் […]

பிணை கைதிகளை விடுவிக்க கோரி ஹமாஸ் தரப்பினருடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் தங்கள் தரப்பு கோரிக்கைகளை ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படை அல்கசாம் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, காசாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி ஒத்துக்கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பிணைய கைதிகளை நாங்கள் விடுவிக்கிறோம். ஆனால் அந்தப் போர் நிறுத்தம் முழுமையானதாக இருக்க வேண்டும். காசா முனைபகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். நாங்கள் வாய்ப்பு அளித்து விட்டோம். ஆனால் இஸ்ரேல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து முடிவு எடுக்காமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu