சஹாரா வணிக குழுமத்தின் தோற்றுனர் சுப்ரதா ராய் நேற்று உயிரிழந்தார்.
75 வயதான சுப்ரதா ராய், நீண்ட காலமாக உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஹாரா வர்த்தக நிறுவனம், நிதித்துறை, ரியல் எஸ்டேட், ஊடகம், பொழுதுபோக்கு, விடுதிகள், விளையாட்டு, போன்ற பல்துறை சார்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிலையில் நிறுவனத்தில் இருந்து பிரித்துக் கொடுக்கப்படாத நிதிகள் மதிப்பு 25000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது செபியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு காரணமாக, முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர்.