ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி 2 தொலைதூர கேலக்ஸிகளை கண்டுபிடித்துள்ளது.
பூமியிலிருந்து தொலைவை கணக்கிட்டால், இரண்டாவது மற்றும் நான்காவது தொலைதூர கேலக்ஸிகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது கண்டுபிடித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கழுகு பார்வையில் இந்த கேலக்ஸிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 3.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Abell 2744 என்ற கேலக்ஸி, இந்த இரு தொலைதூர கேலக்ஸிகள் கண்டுபிடிப்புக்கு மிகவும் துணை புரிந்ததாக கூறப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கேலக்ஸிகளுக்கு UNCOVER z13, UNCOVER z12 என்ன பெயரிடப்பட்டுள்ளது.