மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வான இக்நிட் 2023 நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு புதிய வெளியீடுகளை சத்யா நாதெல்லா அறிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் கணினி பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் வெளியிடப்பட உள்ளன. மைக்ரோசாப்ட் அசூர் கோபால்ட், மைக்ரோசாப்ட் அசூர் மையா போன்ற கிளவுட் தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பல்வேறு மேம்படுத்தல்களை கொண்டு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய அறிவிப்புகள் தவிர, வேறு பல மேம்படுத்தல் சார்ந்த அறிவிப்புகளும் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதனால், மைக்ரோசாப்ட் வர்த்தகம் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














