ஜம்மு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய ரோந்து பணியின் போது, இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டையை ஒட்டிய பகுதியில், இன்று காலை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.