ஆக்சிஸ் வங்கிக்கு 90.92 லட்சம் அபராதம் - மத்திய ரிசர்வ் வங்கி

November 17, 2023

ஆக்சிஸ் வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி 90.92 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி, வாடிக்கையாளர் தரவுகளை முறையாக கையாளவில்லை என்பதால் அபராதம் விதிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடன் வழங்கும் துறையில், முறையான வாடிக்கையாளர் தரவுகளை வங்கி வைத்திருக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. இதனால், அபாயங்கள் அதிகரிப்பதாக தெரிவித்து, அபராதம் விதித்துள்ளது. அத்தோடு, கடனை திருப்பி வாங்குவதற்காக அனுப்பப்படும் வங்கி ஊழியர்களின் நடத்தையிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. […]

ஆக்சிஸ் வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி 90.92 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி, வாடிக்கையாளர் தரவுகளை முறையாக கையாளவில்லை என்பதால் அபராதம் விதிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடன் வழங்கும் துறையில், முறையான வாடிக்கையாளர் தரவுகளை வங்கி வைத்திருக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. இதனால், அபாயங்கள் அதிகரிப்பதாக தெரிவித்து, அபராதம் விதித்துள்ளது. அத்தோடு, கடனை திருப்பி வாங்குவதற்காக அனுப்பப்படும் வங்கி ஊழியர்களின் நடத்தையிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வங்கிக்கு ஏற்கனவே அறிவிப்பாணை வழங்கப்பட்டதாகவும், அதற்கு வங்கி அளித்த பதில்களை பரிசீலித்த பிறகே, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu