திருவிக, ராயபுரம் துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைப்பு

November 21, 2023

சென்னையில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பகல் மட்டுமின்றி இரவிலும் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் நாள் ஒன்றுக்கு 6000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தூய்மை பணியாளர்கள் 19000 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் சென்னையில் 11 மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்க மாநகராட்சி […]

சென்னையில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பகல் மட்டுமின்றி இரவிலும் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் நாள் ஒன்றுக்கு 6000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தூய்மை பணியாளர்கள் 19000 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் சென்னையில் 11 மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்க மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த குப்பைகளை பதப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இரண்டு மண்டலங்களிலும் உள்ள 800 ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். மேலும் இவர்கள் ஓய்வு பெறும் தருவாயில் உள்ளனர். தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துப்புரவு தொழிலாளர்கள் தனியார் மயமாக்குவதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu