ஓபன் ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக எம்மெட் ஷீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் டிவிட்ச் தளத்தின் முன்னாள் இணை தோற்றுனர் என்பது குறிப்பிடத்தக்கது.டிவிட்ச் தளத்தை சாதாரண நிலையில் இருந்து சர்வதேச அரங்கில் கொண்டு சேர்த்ததில் எம்மெட் ஷீர் மிக முக்கிய பங்காற்றி உள்ளார். இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சாம் ஆல்ட்மேன் வெளியேறிய பிறகு, அவரது பொறுப்பில் மிகவும் சரியான நபராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி, தான் பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக ஷீர் தெரிவித்துள்ளார். சாம் அல்ட்மேனை வெளியேற்றியது தொடர்பாக, ஓபன் ஏஐ மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து, ஓபன் ஏஐ நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன.