ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த நிதி நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் 5000 கோடி முதல் 10000 கோடி ரூபாய் நிதி வரை திரட்ட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பத்திர வெளியீட்டின் மூலம் இந்த நிதி திரட்டப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. குறிப்பாக, 5 ஆண்டு கால பத்திரங்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானதை அடுத்து, பங்குச் சந்தையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.