பிரேசில் நாட்டு வரலாற்றில் உச்சபட்ச வெப்பநிலை தற்போது பதிவாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரேசில் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. பிரேசில் நாட்டு வரலாற்றில் 44.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் இதுவரை பதிவானதில்லை. ஆனால், பிரேசிலின் தென்கிழக்கு மாகாண பகுதிகளில், கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த வெப்பநிலை, ஞாயிற்றுக்கிழமை இந்த அளவை எட்டி உள்ளது. இதற்கு எல் நினோ விளைவு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன. அத்துடன், பிரேசிலின் வெப்பநிலை இந்த வாரம் மேலும் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2005 ஆம் ஆண்டு, 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதே, பிரேசிலின் உச்சபட்ச வெப்பநிலையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.