இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் ராணுவங்கள் இணைந்து ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான காணொளியை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் அதிகார பூர்வ எக்ஸ் தளத்தில் இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்தினர் பங்கு பெற்ற ராணுவ பயிற்சியின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இது புனேயில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மித்ர ஷக்தில்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ ஒத்திகை, நவம்பர் 16 முதல் நவம்பர் 29 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. அதேபோல், நேபாள ராணுவத்துடன் மற்றொரு ராணுவ ஒத்திகை உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான காணொளியையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த ராணுவ ஒத்திகைக்கு ‘சூரிய கிரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.