கொக்கோகோலா நிறுவனம், இந்தியாவில் தேநீர் விற்பனையில் களமிறங்க உள்ளது. இதற்காக, உடனடியாக பருகும் வகையைச் சேர்ந்த ‘ஹானஸ்ட் டீ’ என்ற பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த லக்ஷ்மி தேயிலை நிறுவனத்தின் மக்காய்பாரி எஸ்டேட்டில் இருந்து ஆர்கானிக் தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு, ஹானஸ்ட் டீ உற்பத்தி செய்யப்படுகிறது. இது கொக்கோகோலாவின் கிளை நிறுவனமான ஹானஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக வெளிவர உள்ளது. அண்மையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்துடன், எலுமிச்சை, துளசி மற்றும் மாம்பழ சுவைகளிலும் குளுமையான தேநீர் வகைகளை கொக்கோகோலா அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














