பல்கலைக்கழக பாடத்தில் வில்லுப்பாட்டு கலை

November 24, 2023

வில்லுப்பாட்டு கிராமிய பாட்டு உள்ளிட்ட இசை கலைகளை பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களாக துவங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவித்துள்ளார். சென்னையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளர் ஆன டி. எம். கிருஷ்ணா பேசும்பொழுது கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் வேற்றுமை உள்ளது. இதனை மாற்ற வேண்டும் பரதநாட்டியம் எவ்வளவு முக்கியமோ அதே போல் கூத்தும் முக்கியம். இசை, வில்லு பாட்டு, […]

வில்லுப்பாட்டு கிராமிய பாட்டு உள்ளிட்ட இசை கலைகளை பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களாக துவங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சென்னையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளர் ஆன டி. எம். கிருஷ்ணா பேசும்பொழுது கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் வேற்றுமை உள்ளது. இதனை மாற்ற வேண்டும் பரதநாட்டியம் எவ்வளவு முக்கியமோ அதே போல் கூத்தும் முக்கியம். இசை, வில்லு பாட்டு, நாட்டுப்புற பாடல்கள் ஆகியவை பல்கலைக்கழகத்தில் கொண்டுவந்து பட்டப்படிப்பாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் இசையை கற்று தருவதற்கான பாடத்திட்டங்களை பல்கலைக்கழகத்தில் தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார். அழியும் நிலையில் உள்ள இந்த கலைகளுக்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்கும் வகையில் அறிவித்த இந்த கருத்தினை நாட்டுப்புற கலைஞர்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu