ஆட்டோ போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய செயலி ஒன்றை புதுச்சேரி அரசு அறிமுகம் செய்துள்ளது.ஆட்டோ கட்டணங்கள் முறையற்ற வகையில் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பல்வேறு புகார்கள் எழுகின்றன. இதற்கான தீர்வாக, புதுச்சேரி அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்கிறது. இது கேரள மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள ‘கேரளா சவாரி’ செயலியை போன்றதாகும். போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த செயலியின் மூலம், பாதுகாப்பான ஆட்டோ போக்குவரத்து உறுதி செய்யப்படும் எனவும், நியாயமான கட்டணங்கள் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி, முறையான கட்டணங்களை ஆட்டோ ஓட்டுநர்கள் நிர்ணயிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.