கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் விமான கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த பல்வேறு மக்கள் வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் பண்டிகை காலங்களின் போது தங்களது ஊருக்கு வந்து செல்வர். இந்நிலையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மக்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பண்டிகை சீசன் தொடங்கியதை முன்னிட்டு கேரளா விமானங்களின் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமானங்கள் உள்ளது. இதில் வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்ல விமான கட்டணம் தற்போது 11 ஆயிரம் ஆக உள்ளது. இது டிசம்பர் மாத இறுதிக்குள் 27 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துபாயில் இருந்து கேரளா திரும்பவதற்கான டிக்கெட்டுகள் 7000 முதல் 17,000 வரை உள்ள நிலையில் இது 90 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அபுதாபிக்கான விமான கட்டணம் ரூபாய் 10,287 இல் இருந்து 28,647 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் அனைத்து விமான டிக்கெட்டுகளும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற கட்டண உயர்வை தவிர்க்க பண்டிகை காலங்களில் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் மற்றும் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.