நாசா நிர்வாகி பில் நெல்சன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் சில நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே iCET என்ற பெயரில் அவசர காலங்களில் தேவைப்படும் தொழில்நுட்பங்கள் சார்ந்த ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பொருட்டு பில் நெல்சனின் பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. விண்வெளி தொழில்நுட்பம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாக இவரது பயணம் இருக்கப்போகிறது. அத்துடன், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா மையத்தில் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அவரது பயணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து பணியாற்றும் நிசார் திட்டம் சார்ந்த முக்கிய முடிவுகள் அவரது பயணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.