வாட்ஸ் அப் செயலியில் ஒருவரின் சாட் விண்டோவில் இருந்து கொண்டே அவரது ஸ்டேட்டஸை பார்க்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் கொண்டுவரப்படும் புதிய மேம்படுத்தல் குறித்த விவரங்களை WABetaInfo வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் v2.23.25.11 ல், ஒருவரின் ஸ்டேட்டஸ் அவரது சாட் விண்டோவிலேயே தெரியும் படி மேம்படுத்தப்பட்ட அம்சம் அறிமுகமாகியுள்ளது. சாட் விண்டோவில் ஒருவரது பெயர் இடம்பெறும் பகுதிக்கு கீழே, அவரது ஸ்டேட்டஸ் இடம்பெறும் வகையில் மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களை WABetaInfo வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அப்டேட்ஸ் பகுதிக்கு சென்று ஒருவரின் ஸ்டேட்டஸ் ஐ பார்க்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது.