பிரதம மந்திரி அறிமுகப்படுத்திய கரிப் கல்யாண் அன்னை யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டனர். இதனால் பிரதமர் மாதம் தோறும் ஏழை மக்களுக்கு ஐந்து கிலோ உணவு தானியம் வழங்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் அதனோடு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. பின்னர் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது. இது வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.