இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், இன்று காசாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இன்று காசாவில் மீண்டும் போர் தொடங்கியுள்ளது. போர் தொடங்கிய 2 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், காசாவின் வடக்கு, தெற்கு மற்றும் மையப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்து ஹமாஸ் படையினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அங்குள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தப் போவதால், பொதுமக்களை வெளியேறச் சொல்லி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.