ஒலியை விட 32 மடங்கு வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழையும் ஓரியன் விண்கலம் - நாசா வீடியோ பகிர்வு

December 13, 2023

நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டத்தில், ஓரியன் விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. அதன் விண்வெளி பயணம் நிறைவடைந்த பிறகு, மீண்டும் பூமிக்கு வந்தது. இந்த விண்கலம் பூமிக்குள் நுழைந்த காணொளியை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி, ஓரியன் விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த வருடம் டிசம்பர் 11ஆம் தேதி, மீண்டும் பூமிக்குள் நுழைந்தது. விண்கலம் மீண்டும் பூமிக்கு வந்த முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு, நாசா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டத்தில், ஓரியன் விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. அதன் விண்வெளி பயணம் நிறைவடைந்த பிறகு, மீண்டும் பூமிக்கு வந்தது. இந்த விண்கலம் பூமிக்குள் நுழைந்த காணொளியை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி, ஓரியன் விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த வருடம் டிசம்பர் 11ஆம் தேதி, மீண்டும் பூமிக்குள் நுழைந்தது. விண்கலம் மீண்டும் பூமிக்கு வந்த முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு, நாசா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓரியன் விண்கலம் ஒலியை விட 32 மடங்கு வேகத்துடன் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழையும் விண்கலத்தை எந்த பாதிப்பும் இன்றி பூமியில் கொண்டு சேர்ப்பதற்கு, அதி நவீன மற்றும் அதிக திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் தேவை என நாசா குறிப்பிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu