அதானி டோட்டல் கேஸ் பங்குகள் இரண்டே நாட்களில் 15% சரிவடைந்துள்ளன.
அதானி டோட்டல் கேஸ் என்பது, பிரான்சின் டோட்டல் எனர்ஜி மற்றும் அதானி குழுமம் ஆகியவற்றின் கூட்டணி நிறுவனம் ஆகும். இன்றைய வர்த்தக நாளில், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 10% சரிவடைந்து, லோயர் சர்க்யூட் அளவை எட்டியுள்ளது. இன்றைய தினத்தில், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ.1001 அளவில் இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் 85% அளவு உயர்ந்த அதானி டோட்டல் கேஸ், 2 நாட்களில் கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், அடுத்த 2 மாதங்களுக்கு, அதானி ஹோட்டல் கேஸ் பங்கு மதிப்பு 900 முதல் 1150 வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.














