வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வேலூர் அடுத்து அப்துல்லாபுரத்தில் சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள விமான நிலையத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இது 97 ஏக்கர் பரப்பில் 65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதற்காக 850 மீட்டர் நீளமுள்ள ஓடுதளம் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்பொழுது வேலூரில் இருந்து சென்னை பெங்களூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி விமான நிலைய நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய படைகளுடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு ஓத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மாநிலங்களவையில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஒன்பது இருக்கைகள் கொண்ட விமானங்கள் வேலூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்பட உள்ளது .இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.