ஒடிசா மாநிலத்தில் லட்சுமி பேருந்து சேவை என குறைந்த கட்டண பேருந்து சேவையை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்தது.
ஒடிசா மாநிலத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் லட்சுமி பேருந்து சேவை என்னும் அதிநவீன பஸ் சேவையினை அறிமுகப்படுத்த அம் மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக 623 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் முதல் கட்டமாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இதனால் கிராமப்புற பகுதியில் உள்ள அந்த மாவட்ட தலைநகரங்களுக்கு பெண்கள், மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் ஐந்து ரூபாய் குறைந்த கட்டணத்தில் பஸ்ஸில் பயணம் செய்யலாம். மேலும் இதன் மூலம் 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.