மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய தென் மாவட்டங்களுக்கு செல்வதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழ்நாட்டில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு சரிசெய்ய பட்டு மறுநாளே போக்குவரத்து சீரானது. தற்போது தென்மாவட்டங்களில் மழை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இது வானிலை மையம் அறிவித்ததை விடவும் அதிகமாக உள்ளது. மத்திய அரசின் குழுவினர் நான்கு மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் கூடுதல் என்பதால் கூடுதல் நிதியும் கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி வரட்டும் என காத்திருக்காமல் நான்கு மாவட்டங்களுக்கான இழப்பை மாவட்ட மக்களுக்காக தமிழக அரசு அறிவித்தது. மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால் மட்டுமே நிவாரண பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும். தற்போது பிரதமரை சந்தித்து மிச்சான் புயல் நிவாரணத்தோடு தென் மாவட்ட பாதிப்பு நிவாரணம் கோரப்பட உள்ளது. மேலும் தென் மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை அவர் செல்ல உள்ளதாக கூறியுள்ளார்.














