இலங்கையில் வெளிநாட்டு உளவு கப்பல்களுக்கு தடை

December 21, 2023

வெளிநாட்டு உளவு கப்பல்கள் இலங்கை துறைமுகங்களுக்கு வர ஓராண்டுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் சீன ஆய்வு கப்பல்கள் அடிக்கடி வந்து ஆய்வு பணியில் ஈடுபடுகின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அவ்வப்போது இலங்கை துறைமுகங்களுக்கு சீன கப்பல்கள் வருகின்றன. சமீபத்திலும் ஒரு சீன கப்பல் ஆய்வுக்காக வந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் மற்றொரு சீனக் கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வெளிநாட்டு உளவு கப்பல்கள் எதையும் இலங்கை […]

வெளிநாட்டு உளவு கப்பல்கள் இலங்கை துறைமுகங்களுக்கு வர ஓராண்டுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இலங்கையில் சீன ஆய்வு கப்பல்கள் அடிக்கடி வந்து ஆய்வு பணியில் ஈடுபடுகின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அவ்வப்போது இலங்கை துறைமுகங்களுக்கு சீன கப்பல்கள் வருகின்றன. சமீபத்திலும் ஒரு சீன கப்பல் ஆய்வுக்காக வந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் மற்றொரு சீனக் கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெளிநாட்டு உளவு கப்பல்கள் எதையும் இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. இது வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறி இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த பத்து ஆண்டுகளில் தங்கள் உளவு கப்பல்களை இலங்கையில் நிறுத்திய அனைத்து வெளிநாடுகளுக்கும் இந்த முடிவை தெரிவித்து விட்டதாக இலங்கை வெளிவரவு அமைச்சர் அலி சாப்ரி கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu