கோவை- பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை ரயில் நிலையத்திலிருந்து நாளை மறுநாள் கோவை - பொள்ளாச்சி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. கோவை பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் கோவையில் இருந்து மாலை 3 மணிக்கு இந்த ரயில் சேவை தொடங்க உள்ளது. இது கோவையில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.35 மணிக்கு சென்றடையும். இதன் மறுமார்க்கமாக பொள்ளாச்சியிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு 5. 50 மணிக்கு கோவையை சென்றடையும். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் பயணிக்கும் வகையில் வழக்கமான சேவை ஆக இயக்கப்பட உள்ளது. அதுபோல் ஏற்கனவே கோவை பொள்ளாச்சி இடையே வாரத்தின் ஆறு நாட்கள் (சனிக்கிழமை தவிர) இயக்கப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில் திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்பட உள்ளன.