இந்திய ராணுவத் தளவாட உற்பத்தி - ஒரு லட்சம் கோடி இலக்கை தாண்டியது

December 26, 2023

முதல்முறையாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை இந்திய ராணுவ தளவாட உற்பத்தி பதிவு செய்துள்ளது. இது தவிர, ராணுவ தளவாட ஏற்றுமதி 16000 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் அனைத்து துறைகளிலும் தற்சார்பு இந்தியா இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்திய ராணுவ தளவாட உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தது. அதன் விளைவாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை […]

முதல்முறையாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை இந்திய ராணுவ தளவாட உற்பத்தி பதிவு செய்துள்ளது. இது தவிர, ராணுவ தளவாட ஏற்றுமதி 16000 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு தரப்பில் அனைத்து துறைகளிலும் தற்சார்பு இந்தியா இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்திய ராணுவ தளவாட உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தது. அதன் விளைவாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை ராணுவ தளவாட உற்பத்தி பதிவு செய்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் 95000 கோடியாக இருந்தது. மேலும், ராணுவ தளவாட ஏற்றுமதி 10 மடங்கு உயர்ந்து, 16000 கோடி அளவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடப் பொருட்களை உலகின் 85 க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கியுள்ளன. அதில், தேஜஸ் விமானம், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கி போர் கப்பல்கள், ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை அமைப்புகள், நவீன துப்பாக்கிகள் போன்றவை அடங்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu