கடந்த அக்டோபர் மாதத்தில், ஆப்பிள் வாட்ச்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. மசிமோ என்ற மருத்துவ கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக அமைப்பு இந்த தடையை விதித்துள்ளது. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை தெரிவிக்கும் முறையில், ஆப்பிள் வாட்சுகள் வரம்பு மீறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க, 60 நாட்கள் கொடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 25 உடன் இந்த காலக்கெடு நிறைவடைவதால், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவு மற்றும் நவீன வாட்ச்களை இறக்குமதி செய்ய தடை நிலவுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதிய வரவு மற்றும் அதிநவீன வாட்ச்களை விற்பனைக்கு கொண்டு வர ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், அமெரிக்காவில் இறக்குமதி தடை உள்ளதால், அங்கு ஆப்பிள் வாட்ச் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணிக்கும் அம்சம் இடம்பெறாத ஆப்பிள் வாட்சுகளின் விற்பனை நடைபெற்று வருகிறது.














