ஜனவரி 20 அன்று நிலவில் தரையிறங்கும் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்

December 27, 2023

ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமான JAXA, ஸ்லிம் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை அன்று, ஸ்லிம் விண்கலம், நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. இந்த நிலையில், வரும் ஜனவரி 20ஆம் தேதி, ஸ்லிம் விண்கலம் நிலவில் தரையிறங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி ஜனவரி 20ம் தேதி அதிகாலை 12 மணிக்கு ஸ்லிம் விண்கலம் நிலவில் தரையிறங்கத் தொடங்கும். அதிலிருந்து சரியாக 20 நிமிடங்கள் கழித்து, விண்கலம் நிலவில் கால் பதிக்கும் என […]

ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமான JAXA, ஸ்லிம் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை அன்று, ஸ்லிம் விண்கலம், நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. இந்த நிலையில், வரும் ஜனவரி 20ஆம் தேதி, ஸ்லிம் விண்கலம் நிலவில் தரையிறங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நேரப்படி ஜனவரி 20ம் தேதி அதிகாலை 12 மணிக்கு ஸ்லிம் விண்கலம் நிலவில் தரையிறங்கத் தொடங்கும். அதிலிருந்து சரியாக 20 நிமிடங்கள் கழித்து, விண்கலம் நிலவில் கால் பதிக்கும் என JAXA தெரிவித்துள்ளது. அத்துடன், நிலவின் மேற்பரப்பில் மிகவும் துல்லியமாக தரையிறங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன் நிலவில் தரையிறக்கப்பட்ட விண்கலங்கள், சில கிலோமீட்டர் பரப்பளவை இலக்காகக் கொண்டிருந்தன; ஆனால், ஜப்பானின் ஸ்லிம் கலம் 100 மீட்டர் பரப்புக்குள் துல்லியமாக தரையிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu