புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதித்த கோவை கோட்ட வனத்துறை

December 27, 2023

கோவையில் வனத்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி பல்வேறு ஹோட்டல், நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவை உள்ளன. இங்கு புத்தாண்டு பண்டிகையை ஒட்டி கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு புத்தாண்டு கொண்டாட செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அங்குள்ள ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் […]

கோவையில் வனத்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி பல்வேறு ஹோட்டல், நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவை உள்ளன. இங்கு புத்தாண்டு பண்டிகையை ஒட்டி கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு புத்தாண்டு கொண்டாட செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அங்குள்ள ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காடுகளில் வாழும் விலங்குகளுக்கு அச்சம் தரும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது, பட்டாசு வான வேடிக்கைகளை நிகழ்த்தக்கூடாது, கேம்பெயர் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, மேலும் ஒளிரும் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று புத்தாண்டு அன்று எட்டு மணிக்கு மேல் வனசாலைகளை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட அறிவிப்புகளை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து விடுதி உரிமையாளர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu