அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் பகுதியை இஸ்ரோ நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பாரதிய விக்கியான் சம்மேளன கூட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 8 டன் எடையுள்ள ரோபோ திறன்களை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் தொகுதியை இஸ்ரோ நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்த லட்சிய திட்டப்பணியான பாரத் விண்வெளி நிலையம் 2028 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும். இதில் 20 முதல் 1215 டன்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டை புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய ராக்கெட்டுகளால் 10 டன் எடையுள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் கருவிகளை கொண்டு செல்ல முடியும். மேலும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன், எதிர்காலத்தில் இஸ்ரோ பணிகளுக்கு ஒரு மூலக்கல்லாக சர்வதேச விண்வெளி நிலையம் பணி அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.