ஜப்பான் அருகே குரில் தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யா மற்றும் ஜப்பான் இடையே உள்ள குரில் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தீவு ஜப்பானிய தீவான ஹக்கைடுவின் வடக்கு பசுபிக் பெருங்கடலில் இருந்து ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கு முனை வரை நீண்டு உள்ளது. இந்த தீவு 56 தீவுகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்நிலையில் குரில் தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு கீழ் 10 கிலோமீட்டர் மற்றும் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது. இருந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதில் யாரும் பலியானதாக தகவல் இதுவரை இல்லை.