டிசம்பர் 31ஆம் தேதி வரை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் கணக்கிற்கான வாரிசுதாரர்களை நியமனம் செய்ய காலக்கெடும் நிர்ணயித்திருந்தது.
செபி எனப்படும் இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம், டிமேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டுதாரர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சந்தையில் பங்கேற்பவர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில் நாமினேஷன் சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 வரை நிர்ணயித்திருந்தது. இதனை முதலீட்டாளர்கள் சரி வர பயன்படுத்த தவறியதால் மேலும் இவை 30 ஜூன் 2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக செபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது முதலீட்டாளர்களின் சொத்துக்களை சட்டபூர்வ வாரிசுகளுக்கு துரிதமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் நாமினேஷன் செய்ய தவறும் பட்சத்தில் இவர்களின் கணக்கு செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு பிறகு தான் மீண்டும் இயங்க வைக்க முடியும் எனவும், இவ்வசதியை தற்போது முதலீட்டாளர்கள் பயன்படுத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.