ஸ்மார்ட் ஹோம் செய்யறிவு தொழில்நுட்ப சாதனம் வெளியீடு - எல்ஜி அறிவிப்பு

எல்ஜி நிறுவனம், வரும் ஜனவரி 9 முதல் 12 ஆம் தேதி வரை லாஸ் வேகாசில் கண்காட்சி ஒன்றை நடத்துகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான கண்காட்சி இதுவாகும். இந்த கண்காட்சியின் போது, எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹோம் செய்யறிவு தொழில்நுட்ப சாதனம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஜி நிறுவனம் வடிவமைத்துள்ள செய்யறிவு தொழில்நுட்ப சாதனம், வீட்டு வேலைகளின் சுமைகளில் இருந்து மக்களை விடுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பில், […]

எல்ஜி நிறுவனம், வரும் ஜனவரி 9 முதல் 12 ஆம் தேதி வரை லாஸ் வேகாசில் கண்காட்சி ஒன்றை நடத்துகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான கண்காட்சி இதுவாகும். இந்த கண்காட்சியின் போது, எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹோம் செய்யறிவு தொழில்நுட்ப சாதனம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி நிறுவனம் வடிவமைத்துள்ள செய்யறிவு தொழில்நுட்ப சாதனம், வீட்டு வேலைகளின் சுமைகளில் இருந்து மக்களை விடுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பில், தானியங்கி முறையில் செயல்படும் விதமாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ரோபோ போல, 2 கால்களுடன் சக்கரங்கள் மூலம் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் தங்கள் சொந்த மொழியிலேயே கட்டளைகளை பிறப்பிக்கலாம். புகைப்படங்கள் மூலமாகவோ, வாய்ஸ் மூலமாகவோ இது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும். வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் கருவிகளையும் கண்காணிக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu