ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் முதல் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு

ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது முதல் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பை வெற்றிகரமாக அமைத்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், இன்று 21 புதிய செயற்கைக்கோள்கள் ஸ்டார்லிங்க் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டன. அதில் 6 செயற்கை கோள்கள், நேரடியாக செயற்கைக்கோளிலிருந்து தொலைபேசி இணைப்பை வழங்குவதற்காக (Direct to Cell) அமைக்கப்பட்டுள்ளது. இவை வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது குறித்து எலோன் மஸ்க் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இன்று காலை 9:30 மணி அளவில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டில், […]

ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது முதல் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பை வெற்றிகரமாக அமைத்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், இன்று 21 புதிய செயற்கைக்கோள்கள் ஸ்டார்லிங்க் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டன. அதில் 6 செயற்கை கோள்கள், நேரடியாக செயற்கைக்கோளிலிருந்து தொலைபேசி இணைப்பை வழங்குவதற்காக (Direct to Cell) அமைக்கப்பட்டுள்ளது. இவை வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது குறித்து எலோன் மஸ்க் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9:30 மணி அளவில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டில், 21 புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் கொண்டு செல்லப்பட்டன. அவை அனைத்தும், 10:20 மணி அளவில் நிலைநிறுத்தம் செய்யப்பட்டன. இந்த செயற்கை கோள்கள் அடுத்த சில நாட்களுக்குள் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 2024 ஆம் ஆண்டுக்குள், செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பில் இருந்து குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் தொடங்கப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டுக்குள், குரல் அழைப்புகள், இணையம் போன்ற சேவைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu