சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை - செவ்வாய் கிரக வீடியோ வெளியிட்ட கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நீடிக்கும் ஒரு நாள் பொழுதை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் படம் பிடித்துள்ளது. இந்த 12 மணி நேர காணொளியை நாசா வெளியிட்டுள்ளது. பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் நடுவில் சூரியன் வரும்போது, பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செய்திகள் அனுப்பப்படுவதில்லை. சூரிய கதிர்களால் கட்டளைகள் முறையாக சென்றையாது என்பதால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கியூரியாசிட்டி ரோவருக்கு அனுப்பப்படும் கட்டளைகள் இந்த காலகட்டத்தில் நிறுத்தப்பட்டன. அதே […]

செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நீடிக்கும் ஒரு நாள் பொழுதை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் படம் பிடித்துள்ளது. இந்த 12 மணி நேர காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.

பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் நடுவில் சூரியன் வரும்போது, பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செய்திகள் அனுப்பப்படுவதில்லை. சூரிய கதிர்களால் கட்டளைகள் முறையாக சென்றையாது என்பதால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கியூரியாசிட்டி ரோவருக்கு அனுப்பப்படும் கட்டளைகள் இந்த காலகட்டத்தில் நிறுத்தப்பட்டன. அதே வேளையில், ரோவரை இயக்கும் வகையில், அதில் உள்ள கேமராக்கள் மூலம் வீடியோக்கள் பதிவு செய்ய முன்கூட்டியே கட்டளை பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதன்படி, முதல் முறையாக, 12 மணி நேர வீடியோவை ரோவர் பதிவு செய்துள்ளது. இந்த காணொளி மூலம், செவ்வாய் கிரகத்தின் பாறைகள், நிலப்பரப்பு, வளிமண்டல தன்மை, கால நேர மாற்றம் போன்றவை குறித்து அதிக தகவல்களைப் பெற முடிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu