வட கொரியா கிழக்கு கடலில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதனால் தென் கொரியாவின் இராணுவம் பதற்றம் அடைந்துள்ளது. இது வடகொரியாவின் நான்காவது ஏவுதலைக் குறிக்கிறது.
இந்த 2ஏவுகணைகளும் வட கொரிய தலைநகர் பியோங்யாங்கின் வடக்கே உள்ள சுனானில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதாவது தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் முத்தரப்பு நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் பயிற்சிகளை நடத்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இப்பகுதிக்கு விஜயம் செய்தார். இந்த நிகழ்வுகளைக் எதிர்க்கும் வகையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ௯றினார்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் அவ்வறிக்கையில் ௯றினார்.