பண்டிகைக் காலத்தில் சிறுவணிகர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி டெல்லியில் வணிக சிலிண்டருக்கு ரூ.1,885க்கு பதிலாக ரூ.1,859 வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. LPG விலைகள் நகரத்திற்கு நகரம் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாறுபடும். விலையில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் செயல்படுத்தப்படும். அந்த வகையில் தற்போது கொல்கத்தாவில் ரூ.1,959, மும்பை- ல் ரூபாய் 1,811.50 மற்றும் சென்னையில் ரூபாய் 2,009.50 என மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர் மே 19, 2022 அன்று விலை தி௫த்தப்பட்டு ஜூலை 6 ஆம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. அதில் இருந்து வீட்டு சிலிண்டரின் விலை மாறாமல் உள்ளது. அதே நேரத்தில் வணிக சிலிண்டர் ஜூலை 6ல், விலை திருத்தம் செய்யப்பட்டு, யூனிட்டுக்கு, 8.5 ரூபாய் குறைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் மாதம் வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டது. இதற்கிடையில் ஒரு வருடத்தில் வாடிக்கையாளர்கள் 15 சிலிண்டர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற புதிய விதியை கொண்டு வர அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை, எல்பிஜி வீட்டு சிலிண்டர்களை வாங்குவதற்கு அத்தகைய ஒதுக்கீடு இல்லை என்பது கவனிக்கத்தக்கது.