10000 ரூபாயில் 5ஜி போனை வெளியிடும் லாவா நிறுவனம்

October 3, 2022

இந்தியாவின் சொந்த மொபைல் போன் நிறுவனம் லாவா இன்டர்நேஷனல் ஆகும். இந்த நிறுவனம், தற்போது, 10000 ரூபாய் மதிப்பில், 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், லாவா ப்ளேஸ் 5ஜி (Lava Blaze 5G) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவுகள் தீபாவளி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய லாவா நிறுவனத்தின் தலைவர் சுனில் ரெய்னா, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைப்பேசிகளைப் பயன்படுத்தும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் […]

இந்தியாவின் சொந்த மொபைல் போன் நிறுவனம் லாவா இன்டர்நேஷனல் ஆகும். இந்த நிறுவனம், தற்போது, 10000 ரூபாய் மதிப்பில், 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், லாவா ப்ளேஸ் 5ஜி (Lava Blaze 5G) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவுகள் தீபாவளி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய லாவா நிறுவனத்தின் தலைவர் சுனில் ரெய்னா, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைப்பேசிகளைப் பயன்படுத்தும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமைமிகு தருணம்! இந்தியாவைச் சேர்ந்த அனைவருக்கும், எதிர்காலத்திற்கான 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த கைப்பேசி உருவாக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் இந்த தொழில்நுட்பச் சேவையை இந்திய மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். எதிர்கால இந்தியாவின் கனவுகள் நிறைவேறும்" என்று கூறினார்.

5ஜி தொழில்நுட்பத்துடன் சேர்த்து பல நவீன அம்சங்களையும் இந்த லாவா பிளேஸ் 5ஜி கைபேசி உள்ளடக்கி உள்ளது. அவை: 6.5 இன்ச் HD + IPS டிஸ்ப்ளே மற்றும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் இந்த கைபேசியில் உள்ளன. மேலும், 50 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் செல்பி கேமரா ஆகியவை உள்ளது. அத்துடன், 5000 mAh பேட்டரி திறன் கொண்டுள்ள இந்த கைபேசியின் புதுப்பிப்பு திறன் 90 ஹெர்ட்ஸ் ஆகும். மீடியா டெக்கில் இயங்கும் இந்த கைபேசியில், 4ஜிபி + 3ஜிபி ரேம் வசதியுடன் சேர்த்து, 128 ஜிபி சேமிப்புத் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu