ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக, சோனி நேற்று அறிவித்தது. இந்த இணைப்புக்காக ஜீ நிறுவனம் கோடிக்கணக்கில் செலவழித்து உள்ளது. எனவே, இணைப்பு நிறுத்தப்படுவதால் ஜீ நிறுவனத்தின் பங்குகள் இன்று 30% வீழ்ச்சியடைந்தன.
ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பு 10 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும். இது நிறுத்தப்பட்டதால், ஜீ நிறுவனம் இழப்பீடு கோரியுள்ளது. கிட்டத்தட்ட 90 மில்லியன் டாலர்கள் தொகையை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜீ மற்றும் சோனி இணைப்புக்காக ஜீ நிர்வாக இயக்குனர் புனித் கோயங்கா பதவி விலகவும் தயாராக இருந்த நிலையில், இணைப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.